Ex அதிமுக மினிஸ்டர் மற்றும் மகள் மீது வழக்குப்பதிவு - அடுத்த பரபரப்பு

x

ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் புகார் அளித்தார். அதில், சேலம் ஆதிதிராவிடர் நலத்துறை சமையல் பணி நியமனம் தொடர்பாக, தானும், தனது உறவினர்களும், மற்றும் பல இடங்களில் கடன்பெற்றும் 65 லட்சம் ரூபாயை முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியிடம் கொடுத்தாகக் கூறியிருந்தார்.

பணத்தை வாங்கிக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்காமல் காலதாமதம் செய்து அலைய வைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், இந்த வழக்கை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்