மகளிர் உரிமை தொகை கேட்டு அட்டூழியம் செய்த அதிமுக பிரமுகர் - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

x

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே, தனது மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி ரகளை செய்து மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திருக்கண்ணங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் தீபிகா காந்தி. இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு வந்த அதிமுக பிரமுகர் வடிவேல், தனது மனைவிக்கு மகளிர் உரிமைத்தொகை கேட்டு தகராறில் ஈடுபட்டார். மதுபோதையில் ஒருமையில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தீபிகா காந்தி அளித்த புகாரின்பேரில், வடிவேல் மீது 4 பிரிவுகளின் கீழ், கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்