"AI தொழில் நுட்பத்திற்கு இதயம் கிடையாது" - உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி
ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு இதயம் கிடையாது, இதனை சர்வர் மாதிரி பயன்படுத்த வேண்டும் என்றும், முதலாளியாக மாற்றிவிட கூடாது என உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். ஆஸ்பைர் கே.சுவாமிநாதன் மற்றும் வழக்கறிஞர் அனிதா தாமஸ் இணைந்து எழுதியுள்ள ஏ.ஐ தொழில் நுட்பம் தொடர்பான புத்தகத்தை அவர் சென்னையில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பாலாஜி, ஏ.ஐ தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும், எதிர்மறையாகவோ, அழிவுப்பூர்மாகவோ செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்ப்பு கொடுத்தால் வழக்கு ஆவணங்களின் வெளிப்படை தன்மை இருக்காது என்பதால், தீர்ப்புக்கு ஏஐயை பயன்படுத்த கூடாது என்றும் வலியறுத்தினார்.
Next Story