மனைவியின் அந்தரங்கத்தை லீக் செய்த கணவன்.. ஆதாரம் அம்பலமானதும் ஆக்டிவேட் ஆன விஷ புத்தி | Chennai
சென்னை பெரம்பூர் மரியநாயகம் முதல் தெருவை சேர்ந்த தனசேகர் என்பவருக்கும், ரம்யா என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன் திருமணமாகி, 14 வயதில் மகனும் 11 வயதில் மகளும் உள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன்பு ரம்யாவுக்கு அருண் என்பவருடன் தகாத உறவு இருப்பதாக கூறி, அருண் மனைவி திவ்யா, திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்துப் பேசி எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, அருண் மனைவி திவ்யா கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருதினங்களுக்கு முன்பு, தனசேகர் வீட்டில் இருந்தபோது, அங்கு 2 பேருடன் வந்த அருண், ரம்யாவை கேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனசேகரை சரமாரியாக வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தனசேகரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய அருண் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவரிடம் போலீசர் விசாரணை நடத்தியதில், தனசேகர்தான் ஆதாரங்களை தனது மனைவி திவ்யாவிடம் கொடுத்ததாகவும், அதனால் அவரை வெட்டியதாகவும் கூறினார். இதையடுத்து, கைதான 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.