தனியாக வந்து அதிமுக-க்கு ஷாக் கொடுத்த ராஜேந்திர பாலாஜி | ADMK

x

மாமன்னர் பூலித்தேவரின் 309 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு , திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக வந்து பூலித்தேவருக்கு மரியாதை செலுத்திய நிலையில், ராஜேந்திர பாலாஜி தனியாக வந்து மரியாதை செலுத்தியது அதிமுகவினர் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்