"பதுங்குவது பாய்வதற்காக... பயந்து ஓடும் எண்ணம் அதிமுகவுக்கு கிடையாது" - ராஜேந்திர பாலாஜி | ADMK

x

சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அங்குள்ள முதியோர்களுடன் அமர்ந்து, அவர் உணவு அருந்தினார். பின்னணி பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவானது, நாட்டுப்புற பாடல்களுடன், ஆட்டம், பாட்டம் என களை கட்டியது. அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்