"தொடரும் தாக்குதல்.. அதிமுகவில் நடப்பது என்ன..?" மேடையில் உடைத்து பேசிய அதிமுக எம்எல்ஏ | ADMK

x

திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கள ஆய்வு கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதியாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலையுடன் திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதி நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மேலூர் தொகுதியை சேர்ந்தவர்களை புகைப்படம் எடுக்க விடாமல் திருப்பரங்குன்றம் தொகுதியினர் தடுத்ததாக இரு தரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றனர்.

ஏற்கனவே சில இடங்களில் அதிமுக களஆய்வின்போது, அடிதடி மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் திருப்பரங்குன்றத்திலும் அதேபோல் நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்