களமிறங்கும் அதிமுக ஆய்வுக்குழு.. மூன்றாக பிரிந்து அதிரடி திட்டம்

x

அ.தி.மு.கவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கள ஆய்வுக் குழு, தமிழகம் முழுவதும் மூன்று பிரிவுகளாக பிரிந்து கட்சியினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி பணிகளில் நிர்வாகிகள் எப்படி ஈடுபட்டு வருகிறார்கள்? -

உறுப்பினர் அட்டைகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துள்ளதா? என்பதை கண்காணித்து அறிக்கை அளிக்க மூத்த நிர்வாகிகள் கொண்ட கள ஆய்வு குழு ஒன்றை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.

அதில், கே பி முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர், டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அதிமுக தலைமையிடம் கள ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு முதலில் சென்னையில் கூடி தங்களுக்குள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு மூன்று பிரிவுகளாக பிரிந்து சென்று ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வு பணி முடிந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும், அதன் பின்னர் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்