"அன்று போராடிய இன்றைய அமைச்சர் எங்கே?".. கொதிக்கும் மக்கள்

x

விவசாயிகளுக்காக கட்டப்பட்ட தடுப்பணை சேதமான நிலையில், 4 ஆண்டுகள் நடவடிக்கை இல்லையென விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், திரிமங்கலம் - விழுப்புரம் மாவட்டம் தளவானூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்டப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட்ட இந்த தடுப்பணை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தடுப்பணை கட்டப்பட்ட ஒன்றரை மாதத்தில் அணை வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அந்த நேரத்தில், அணைக்காக போராட்டம் நடத்திய அமைச்சர் பொன்முடி, தாங்கள் ஆட்சி வந்ததும் அணை கட்டி தருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதுவரை நான்கு ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லையென திரிமங்கலம், தளவானூர் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குடிநீர் பாசனம் அடியோடு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைந்து அணையை சரி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்