முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கி புத்தாண்டை கொண்டாடிய நடிகர் மோகன் | Actor Mohan

x

நடிகர் மோகன், அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில், முதியோர்களுடன் புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு வந்திருந்த அவர், இல்லத்தில் தங்கி இருப்பவர்களுக்கு அன்னதானம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார். நடிகர் மோகனைக் காண்பதற்கு ஏராளமான பொது மக்கள் கூடினர். அவர்களுடன் மோகன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர், தனது ரசிகர் மன்றம் சார்பில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்