எமனாக இருக்கும் பாதை..! 10 பேரை காவு வாங்கிய பனை மரம்.. திகிலூட்டும் அதிர்ச்சி தகவல் | Kovai
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு சிங்கையன் புதூரை சேர்ந்த மூன்று இளைஞர்கள், கிணத்துக்கடவில் உள்ள பேக்கரியில் தேநீர் குடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். சொக்கனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோர பனை மரத்தின் மீது பலமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் இரு சக்கரவாகனத்தில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story