மீட்கப்பட்ட நகைகளை மக்களின் ஓப்படைத்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர்

x

கடந்த 6 மாதத்தில் மீட்கப்பட்ட 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி மற்றும் 507 செல்போன் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் வழங்கினார். மேலும் அவர் சைபர் கிரைம் மோசடி குற்றங்களில் 35 லட்ச ரூபாய் பணம் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதோடு, ஆவடி மாநகரில் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் மட்டுமின்றி நில அபகரிப்பு, இணைய வழி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 208 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்