நாளை முதல் ஆவின் பச்சை நிற பால் நிறுத்தம்.. ஏன்? - அமைச்சர் விளக்கம்

x

தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பாலை, தமிழக‌ அரசின் நிறுவனமான, ஆவின் நிறுவனம் வினியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம், 4 வகையான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் நிலையில், 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட் 40 சதவீதம் விற்பனையாகிறது. மற்ற தனியார் நிறுவனங்களின் பால், ஒரு லிட்டர் 54 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், ஆவின் பச்சை நிற பால் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. பச்சை நிற பால் பாக்கெட்டில் கொழுப்பை சேர்ப்பதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்குவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள டிலைட் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்து, அதே விலைக்கு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆவின் பச்சை நிற பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், சென்னையில் சனிக்கிழமை முதல் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்