``குழந்தைக்கு ஆதார்''... `போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே'... அதிர வைத்த வீடியோ கால்...மிரண்டு போன நபர்... கேட்போரை திகிலூட்டும் போன் கால்

x

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒட்டுநராக பணியாற்றும் ஒருவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்து இருக்கிறது.அதில் பேசியவர் அக்லக் கான் என்றும் அவருடைய ஐந்து வயதுக் குழந்தைக்கு ஆதார் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்ததாகக் கூறி இருக்கிறார்.

ஆதார் கார்டு பெறுவதற்கான தனது மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை மாற்றிக் கொடுத்து விட்டதாகக் கூறி இருக்கிறார். அந்த எண் சென்னையில் ஓட்டுநராக பணிபுரியும் தங்களுடையது என்பது தெரியவந்ததாகவும் கூறி இருக்கிறார்.

எனவே ஒட்டுநரின் எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி எண்ணைத் தெரிவித்தால் தனது குழந்தைக்கு ஆதார் கார்டு பெறுவதை உறுதி செய்ய முடியும் எனக் கூறி இருக்கிறார். மேலும் அந்த நபர் அவரது குழந்தைக்கு விண்ணப்பித்த ஆவணங்களையும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பி இருக்கிறார்.

ஏற்கனவே வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண்ணைக் கேட்பது, அமேசானில் இருந்து பரிசுப் பொருள் வந்து இருப்பதாகக் கூறி ஓடிபி எண் கேட்பது எனப் பல சைபர் க்ரைம் மோசடிகள் நடந்து இருப்பதால் உஷாரான சென்னை ஓட்டுநர், அக்லக்கானை அருகில் உள்ள காவல் நிலையம் சென்று நடந்த விவரத்தைக் கூறி அவர்கள் மூலம் தன்னை அழைக்குமாறு கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்ற அந்த நபர் காவல் நிலையத்தின் முன்பாக நின்று வீடியோ கால் செய்து இருக்கிறார். ஆனால் அங்குள்ள காவலர் தன்னிடம் பேச மறுப்பதாகக் கூறி இருக்கிறார்.

ஆனாலும் விடாத ஓட்டுநர் காவல் நிலைய ஆய்வாளரிடம் பேச வேண்டும் என்று கூறியதால் அக்லக்கான் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த அழைப்பு வரவில்லை என ஓட்டுநர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஒட்டுநர் சென்னை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்போது குழந்தையின் ஆதார் கார்டில் தவறுதலாகச் சம்மந்தப்பட்டவரின் செல்போன் எண்ணைக் கொடுத்து விட்டதாகக் கூறி நூதன முறையில் மோசடி நடைபெறுவதாகவும் பொது மக்கள் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீசர் அறிவுரை வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்