அரிசி கடத்தலை வெளிச்சம் காட்டியவருக்கு காத்திருந்த ஷாக்..! - நினைக்க முடியாதை சொல்லிய இருவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, டிராக்டரில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட நபருக்கு, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுப்புலாபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சியை வெளியிட்ட கணபதி என்பவருக்கு ரேசன் அரிசி கடத்திய சிவசுப்பிரமணியன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், சிவசுப்பிரமணியன், மூர்த்தி ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சங்கரன்கோவில் பகுதியில் ரேசன் அரிசி கடத்தலுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
Next Story