பட்டப்பகலில் செய்த துணிகர சம்பவம்..நொடியில் மறைந்து போன ரூ.13லட்சம்..வெளியான அதிர்ச்சி CCTV காட்சி
ஒசூர் அருகே, காரின் கண்ணாடியை உடைத்து, 13 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான சர்ஜாபுரம் அடுத்துள்ள சோம்பூர் பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம் முன்பு, பாபு என்பவர் தனது சொகுசை காரை நிறுத்தி விட்டுச் சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், காரின் கண்ணாடியை உடைத்து, காரினுள் ஒரு பையினுள் இருந்த 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story