மதுரையில் குடியரசு தின விழா - கண்டு ரசித்த பிரான்ஸ் நாட்டினர் | Madurai | 76th Republic Day

x

மதுரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை ஃபிரான்ஸை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கண்டுரசித்தனர். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசியக்கொடியேற்றினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், பிரான்சில் இருந்து வந்திருந்த 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்