ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - மருமகள் கைது
எருமப்பட்டி அடுத்த அ.வாழவந்தி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ், பூங்கொடி தம்பதி, மற்றும் அவரது மகன் சுரேந்தர் ஆகிய 3 பேர் கடந்த 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காவல்துறையின் புலன் விசாரணையில் 6 மாதத்திற்கு முன் சுரேந்தருக்கு சினேகா என்ற பெண்ணுடன் திருமணமானது தெரியவந்தது. சினேகா கொடுத்த மன உளைச்சல் காரணமாகவே சுரேந்தர், செல்வராஜ், பூங்கொடி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக சுரேந்தரின் மனைவி சினேகா மீது எருமபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story