இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2023)
எடப்பாடி பழனிசாமி துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்...சென்னையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில், டிடிவி தினகரன் ஆவேசம்...
சென்னை ஆளுநர் மாளிகை எதிரே உள்ள இடத்தில் தீ விபத்து...தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்...
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்ததால் பரபரப்பு...தாம்பரம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு...
பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழப்பு..சஹாரா ரயில் நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதில் 80-க்கும் மேற்பட்டோர் காயம்...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைக்கு புறம்பாக அமைக்கப்பட்டிருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பேன்...நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்...
காவிரியின் வரலாறு தெரியாமல், ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்....தமிழ்நாடு நீர்வளத்துறை துரைமுருகன் விமர்சனம்...
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை புதுச்சேரி வருகை...கழிவுநீர் கால்வாயை திரையால் மூடிய அதிகாரிகள்... விமர்சனம் எழுந்ததால் திரை அகற்றம்...
ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும் மீண்டும் ஏன் பதவி வழங்கவில்லை?...தகுதி நீக்கத்தை திரும்பப் பெற்றால் மீண்டும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வருவார் என்பதால் அச்சமா? என்றும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி கேள்வி...
ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை?...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கேள்வி...
கிண்டி ஆளுனர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு 'மகாகவி பாரதியார் மண்டபம்' என பெயர் மாற்றம்...புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு... முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு...
சந்திரயான் - 3 விண்கலம் எடுத்த நிலவின் முதல் வீடியோ வெளியானது.....நிலவின் சுற்றுப்பகுதியை அருகில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.....