'தமிழ்நாடு தான் இதற்கு ஏற்ற மாநிலம்.." இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் சொன்ன பாயிண்ட்
'தமிழ்நாடு தான் இதற்கு ஏற்ற மாநிலம்.." இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் சொன்ன பாயிண்ட்
#thanthitv
இந்துஸ்தான் வர்த்தக சபையின் 78வது ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் அமைப்பின் புதிய தலைவராக லினேஷ் சனத் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாவில் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழும தலைவர் சிவ்தாஸ் மீனா, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சிவ்தாஸ் மீனா, பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறினார். விழா தொடர்பாக பேட்டி அளித்த லினேஷ் சனத் குமார், தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் முனைவோருக்கும் ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருவதாகக் கூறினார்.
Next Story