தனது கிரிக்கெட் வாரிசு யார்? - விஜய் ஸ்டைலில் அறிவித்த அஸ்வின்
முன்னாள் இந்திய வீரரான அஷ்வின், தனது இடத்தில் வாஷிங்டன் சுந்தரை, தி கோட் பட ஸ்டைலில் சுட்டிக் காட்டியுள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அஷ்வினின் ஆட்டத்தை பார்த்து வளர்ந்ததாகவும், பின்பு அவருடனே சேர்ந்து விளையாடி கற்றுக் கொண்டது மிகச்சிறந்த அனுபவம் என்றும் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர், எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இதற்கு விஜய்யின் தி கோட் பட ஸ்டைலில், துப்பாக்கிய பிடிங்க வாஷி என்று அஷ்வின் ரிப்ளை செய்துள்ளார். மேலும் கெட் டுகதரின்போது வாஷிங்டன் சுந்தர் பேசிய 2 நிமிடங்கள் சிறப்பானது என்றும் அஷ்வின் பதிவிட்டுள்ளார்.
Next Story