வருண் சுழலில் சிக்கி சின்னாபின்னமான கிவிஸ் - செமிபைனல் செல்லும் இந்தியாவுக்கு குட்நியூஸ்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் இணை சிறப்பாக ஆடியது. 42 ரன்களில் அக்சர் படேல் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பால் 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து 250 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி இந்திய ஸ்பின்னர்களிடம் தடுமாறியது. குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்து பேட்டர்களை தனது மாயாஜால சுழலால் கலங்கடித்தார். ஒருமுனையில் நிலைத்து ஆடிய வில்லியம்சன் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, 46வது ஓவரில் 205 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது