UEFA Champions League - 14-வது முறையாக சாம்பியன்..! - லிவர்பூலை தட்டி தூக்கிய ரியல் மேட்ரிட்

x

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. பிரான்ஸில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ரியல் மேட்ரிட் அணியும், லிவர் பூல் அணியும் மோதின. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வெற்றது. இதன்மூலம் 14வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை ரியல் மேட்ரிட் கைப்பற்றி உள்ளது.






Next Story

மேலும் செய்திகள்