TNPL கிரிக்கெட்.. இறுதிபோட்டி சேப்பாக்கத்திலா? - வெளியான மாஸ் அறிவிப்பு

x

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது.

ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், இறுதிப்போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், சென்னை, சேலம், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி மட்டுமே நடைபெற உள்ளது. முதல் லீக் போட்டிகள் சேலத்தில் ஜூலை 5-ம் தேதியும், 2-வது லீக் போட்டி கோவையில் ஜூலை 13-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும், 3-வது லீக் போட்டி திருநெல்வேலியில் 20-ம் தேதியும், கடைசி லீக் போட்டி திண்டுக்கல்லில் 26-ம் தேதியும் நடைபெற உள்ளது. சேலம், கோவை லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஜூன் 20-ம் தேதி முதல் Paytm Insider தளத்தில் கிடைக்கும்.


Next Story

மேலும் செய்திகள்