`TNPL ஏலம்' புதிய விதிமுறையால் வீரர்கள் கடும் அதிருப்தி

x

கடந்த 2016ம் ஆண்டு முதல் நடத்தப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஏலத்தில் வீரர்களுக்கான விலை 50 ஆயிரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெகா ஏலத்தையொட்டி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 5 வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்புமாறு 8 அணி நிர்வாகங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அணியில் அதிகபட்சமாக 20 வீரர்களும் குறைந்தபட்சம் 16 வீரர்களும் இருக்க வேண்டும்..., ஒவ்வொரு அணி நிர்வாகமும் ஏலத்தில் 80 லட்சம் ரூபாய் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி தக்கவைக்கப்படும் 5 வீரர்களில் முதலாவது CAPPED வீரருக்கு மொத்த ஏலத்தொகையில் இருந்து 20 சதவீத தொகையை அணி நிர்வாகம் வழங்க வேண்டும். அதாவது அந்த வீரருக்கு 16 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.....

கடந்த ஏலத்தில் அதிகபட்சமாக சாய்கிஷோர் மற்றும் சஞ்சய் யாதவ் தலா 22 லட்சத்திற்கு ஏலம்போன நிலையில், இந்த முறை அவர்கள் தக்கவைக்கப்பட்டால் அதிகபட்சமாக 16 லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வீரர்களின் ஒப்புதல் இல்லாமலேயே வீரர்களை தக்கவைக்கவும் டி.என்.பி.எல். விதிமுறை அனுமதி அளிப்பதால், வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்