"Gate கிட்ட வாங்க தரேன்" - IPL டிக்கெட்டிற்கு பதிலாக அல்வா - டுபாக்கூரை தொக்காக தூக்கிய போலீஸ்

x

சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை - குஜராத் அணிகளுக்கான இடையேயான போட்டி நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்தனர். இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் காவலாளியாக பணியாற்றுவதாக கூறிய நபர் ஒருவர், தன்னிடம் டிக்கெட் இருப்பதாகக் கூறி, சென்னை போரூரைச் சேர்ந்த கிருபானந்தன் உட்பட 2 பேரிடம், 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். அப்போது, 15ம் எண் கொண்ட கேட்டிற்கு வந்தால், டிக்கெட் தருவதாக கூறிவிட்டு சென்றவர், திடீரென மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் பேரில், மோசடி நபர் அளித்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும், அவர் சேப்பாக்கம் மைதான காவலாளி இல்லை என்பதும் தெரியவந்தது. இதனிடையே, இதேபோல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 18 வழக்குகள் பதிவு செய்து, 24 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 83 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்