சூடேறும் பிரிஸ்பேன் டெஸ்ட்..கை கொடுக்குமா இந்தியாவின் போராட்டம் | IND vs AUS | Test Cricket

x

பி.ஜி.டி. தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா மூன்றாம் நாள் முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து நான்காவது நாளில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய வீரர்கள், ஃபாலோ ஆனை தவிர்க்க கடுமையாக போராடினர். பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுலும், 77 ரன்கள் அடித்த ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவை கவுரமாக இலக்கை எட்ட உதவினர். இறுதிக்கட்டத்தில் ஆகாஷ் தீப்பின் சிறப்பான பேட்டிங்கால் 246 ரன்களை கடந்த இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தவிர்த்தது. நான்காம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 27 ரன்களுடனும், பும்ரா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பிரிஸ்பேனில் அடிக்கடி மழை குறுக்கிடுவதால் போட்டியில் முடிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 193 ரன்கள் பின்தங்கி இருப்பதாலும், ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருப்பதாலும், இந்தியா டிரா செய்ய போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்