இந்தியாவின் கடைசி வாய்ப்பு... நாளை வாழ்வா.. சாவா.. ஆட்டம்

x

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்க உள்ளது. தொடரை சமன் செய்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான வாய்ப்பை தக்கவைக்க இந்தியா இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடர்ந்து தடுமாறிவரும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பும்ராவிற்கு மற்ற இந்திய பவுலர்களும் உறுதுணையாக செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியை டிரா செய்தாலே பிஜிடி தொடரை வென்றுவிடும். கேன்சருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தப் போட்டியில் பிங்க் தொப்பி அணிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்