சேப்பாக்கத்தில் மோதும் IND VS ENG.. டிக்கெட் விலை மற்றும் தேதி அறிவிப்பு

x

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டி வருகிற 22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 12ம் தேதி காலை 11 மணி முதல் ஆன்-லைனில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரத்து 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியைக் காண மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கு வழக்கம்போல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்