T20 வரலாற்றில் ரஷீத் கான் உலக சாதனை | Cricket | Rashid Khan | T20 | Thanthi TV
டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் உலக சாதனை படைத்துள்ளார். எஸ்.ஏ டி20 தொடரில் எம்.ஐ. கேப்டவுன் அணியில் விளையாடிவரும் ரஷீத் கான், Paarl Royals அணிக்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிரோவோ 631 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை ரஷீத் கான் தற்போது முந்தியுள்ளார். இதுவரை 461 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் 633 விக்கெட்டுகள் வீழ்த்தி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
Next Story