சிட்னி ஆடுகளம் குறித்து எழுந்த விமர்சனம் - ஐசிசி கொடுத்த விளக்கம்..

x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்களுக்கு ஐசிசி ரேட்டிங் அளித்துள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவடைந்தது. இதனால் சிட்னி ஆடுகளம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சிட்னி ஆடுகளம் திருப்திகரமாகவே இருந்ததாக ஐசிசி ரேட்டிங் அளித்துள்ளது. பெர்த் (perth), அடிலெய்டு (adelaide), மெல்போர்ன் (melbourne) உள்ளிட்ட மற்ற ஆடுகளங்கள் மிகச்சிறப்பான முறையில் இருந்ததாக ஐசிசி கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்