சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறாதது குறித்து முதன்முதலில் மனம் திறந்த SKY

x

ஒருநாள் போட்டியில் நன்றாக விளையாடி இருந்தால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும் என, இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக, கொல்கத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஒருநாள் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாகவும், அதனால்தான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேர்வு செய்யப்பட்ட அணி சிறப்பானது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்