ஓய்வு அறிவிப்பை வாபஸ் வாங்கிய இந்திய ஜாம்பவான்
இந்தியாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார். 40 வயதாகும் சுனில் சேத்ரி கடந்த ஆண்டு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பை அவர் திரும்பப் பெற்றுள்ளார். வருகிற 19ம் தேதி மாலத்தீவிற்கு எதிராக நடைபெறும் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் சுனில் சேத்ரி விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story