கிரிக்கெட் வாழ்க்கையில் ஷாகிப் அல்ஹசனுக்கு விழுந்த பேரிடி
வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷாகிப் அல்ஹசன், சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டு உள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழலால் அமெரிக்காவில் தங்கியுள்ள ஷாகிப் அல்ஹசன், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் அவர் பந்துவீசியது, விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சோதனையில் நிரூபணம் ஆனதால், இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் பந்துவீச ஷாகிப் அல்ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச போட்டிகளிலும் ஷாகிப் அல்ஹசன் பந்துவீச தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Next Story