பாகிஸ்தானை பூஜ்யமாக்கி ஊதி தள்ளிய நியூஸிலாந்து

x

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. டூன்டினில் Dunedin நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் அஹா Salman Agha 46 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 136 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு டிம் சிஃபர்ட் Tim Seifert, ஃபின் ஆலன் Finn Allen தொடக்க ஜோடி அதிரடி தொடக்கம் தந்தது. ஷாகீன் அஃப்ரிடி SHAHEEN AFRIDI வீசிய 3வது ஓவரில் டிம் சிஃபர்ட் Tim Seifert 4 சிக்சர்களைப் பறக்கவிட்டார்.

டிம் சிஃபர்ட் 45 ரன்களும் ஃபின் ஆலன் 38 ரன்களும் எடுக்க 14வது ஓவரில் இலக்கை எட்டிய நியூசிலாந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரில் 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்