2வது ஒருநாள் போட்டி - நியூசி. 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடைபெற்ற இந்த போட்டி, மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 37 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 79 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து பேட் செய்த இலங்கை 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, தொடரையும் கைப்பற்றியது.
Next Story