8 சுற்றுகள் - கடைசிவரை போராடி மைக் டைசன் தோல்வி
20ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் யாராலும் அசைக்க முடியாத குத்துச்சண்டை வீரராக வலம் வந்தவர்...
கிட் டைனமைட், அயர்ன் மைக் என கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாக்-அவுட் நாயகன்...
ஹெவிவெய்ட் பிரிவில் வெற்றிகளைக் குவித்து புகழின் உச்சிக்கு சென்ற மாவீரன் மைக் டைசன்,,,, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மோசமான அத்தியாயங்களைக் கொண்டவர்...
ஆம்..... போதைப் பொருள் பழக்கம், பாலியல் புகார்கள், சிறை தண்டனை, போட்டியாளரின் காதைக் கடித்த சம்பவம் என எண்ணற்ற சர்ச்சைகளில் சிக்கித் தவித்து கேரியரில் அதலபாதாளத்திற்கு சென்றவர் டைசன்...
58 வயதாகும் டைசன், மீண்டும் பாக்ஸிங் ரிங்கில் கால் வைக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதுமே அவரின் ஆதிகால ரசிகர்கள் தொட்டு பாக்ஸிங் உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது.
ஜாம்பவான் மைக் டைசனை எதிர்த்து விளையாடியது வெறும் 27 வயதே ஆன பிரபல யூடியூபரும் குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால்...
அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற போட்டிக்கு மைக் டைசன் வந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் தங்களின் ஆதர்ச நாயகனைக் கண்டு ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள்...
2 நிமிடங்கள் வீதம் 8 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் ஜேக் பாலின் கைதான் ஓங்கியது.
ஜேக் பாலின் பஞ்ச்களுக்கு டைசனால் ஈடுகொடுக்க முடியவில்லை... அவரின் வேகமும் ஜேக் பாலிற்கு இணையாக இல்லை...
8 சுற்றுகளின் முடிவில் 79க்கு 73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார். வென்ற அடுத்த கணம் மைக் டைசனுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தி ரசிகர்களின் மனதில் ஜேக் பால் இடம்பிடித்தார்.
டைசனின் தோல்விக்கு அவரது வயதுதான் பிரதானக் காரணம்... என்னதான் ஜாம்பவானாக இருந்தாலும் 58 வயதில் குத்துச்சண்டையில் வெல்வது கடினமான காரியம்...
போட்டிக்குப் பிறகு தனது இறுதிப்போட்டி இது அல்ல என்பதையும் டைசன் உணர்த்தினார். மறுபுறம், டைசன் ஒரு லெஜன்ட் என ஜேக் பால் புகழாரம் சூட்டினார்.
58 வயதில் தீரத்துடன் டைசன் களம் கண்டதையும், நாக்-அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் அவர் போராடியதையும் A LION IS ALWAYS A LION எனக் குறிப்பிட்டு சிலாகித்து வருகின்றனர் ரசிகர்கள்...