மெஸ்ஸி... மெஸ்ஸி... - ரசிகர்கள் கோஷம் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மெஸ்ஸி

x

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ஹாங்காங்கில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மெஸ்ஸி அங்கம் வகிக்கும் இன்டர் மியாமி அணி, நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்க ஹாங்காங் வந்துள்ளது. இதையொட்டி ஹாங்காங்கில் மெஸ்ஸி பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். சிறுவர்களுடன் மெஸ்ஸி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். மெஸ்ஸியை சந்திப்பதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்