``அவரையே சந்திச்சிட்டாரா? அப்போ இனி சதம் வந்துட்டே இருக்குமே’’ - செம குஷியில் கோலி ரசிகர்கள்

x

உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பிரபல சாமியாரிடம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆசி பெற்றார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுத்ததால் விமர்சனத்திற்குள்ளான கோலி, மீண்டும் பார்முக்கு திரும்பி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்க காத்திருக்கிறார். இந்த சூழலில், பிருந்தாவனத்திற்கு மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இரு குழந்தைகளுடன் சென்ற கோலி, பிரேமானந்த் மகாராஜிடம் ஆசி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்ம் அவுட்டில் தவித்தபோது பிரேமானந்த்திடம் ஆசி பெற்ற கோலி, அதன்பின்னர் அடுத்தடுத்து 6 சதங்களை அடித்ததை சுட்டிக்காட்டி, அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்