ஜூனியர் ஹாக்கி - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

x
  • ஓமனில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
  • ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3 கோல்கள் அடிக்க பாகிஸ்தான் 2 கோல்கள் அடித்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் மேலும் 2 கோல் அடித்தனர். பாகிஸ்தானின் கோல் முயற்சிகளையும் இந்திய வீரர்கள் முறியடித்தனர். 2வது பாதி ஆட்டத்தில் பாகிஸ்தான் ஒரு கோல் மட்டுமே அடித்த நிலையில் பரபரப்பான ஆட்ட நேர முடிவில் இந்தியா 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்