கேப்டனை அறிவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.. ஸ்டார்ட்டான IPL பீவர்
நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு, அணி நிர்வாகத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றி பஞ்சாப் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வாங்கி தருவதே லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story