முதல் ஒருநாள் போட்டி - அயர்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

முதல் ஒருநாள் போட்டி - அயர்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி
x

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து மகளிர் அணி, 50 ஓவர்களில் 238 ரன் எடுத்தது. அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் (Gaby Lewis) அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து பேட் செய்த இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் பிரதிகா ராவல் (Pratika Rawal) 89 ரன்களும், தேஜல் ஹசாப்னிஸ் (Tejal Hasabnis) 53 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி முன்னிலை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்