8 வருடங்களுக்கு பின் நடக்கும் மினி உலக கோப்பை - இன்று முதல்... குஷியில் ரசிகர்கள்

x

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று ஆரம்பம் ஆகிறது. சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெற உள்ளது. தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், மிட்ச்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்