பாக்.ஐ பழி தீர்த்த கோலி - ஒரே மேட்ச்...ஒவ்வொரு ரன்னிலும் ரெக்கார்டு!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி அதிரடியாக விளையாடி, 122 ரன்கள் குவித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 47 சதமாகும். இப்போட்டியின் போது விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். சச்சின் 321 இன்னிங்ஸ்களில் 13 ஆயிரம் ரன்களை எடுத்திருந்த நிலையில், விராட் கோலி வெறும் 267 இன்னிங்ஸ்களிலேயே அந்த ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி - கே.எல் ராகுல் இணை, 3வது விக்கெட்டிற்கு 233 ரன்கள் குவித்து அசத்தியது. இது, ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில், எந்த ஒரு விக்கெட்டிற்க்கும் ஒரு இணை குவித்த அதிகபட்ச ரன்களாக பதிவானது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், எந்த ஒரு விக்கெட்டிற்கும், இந்திய இணை குவித்த அதிகபட்ச ரன்களாகவும் அது பதிவானது.