"கம்பீர் ஒரு நயவஞ்சகர்" - மனோஜ் திவாரி குற்றச்சாட்டால் பரபரப்பு | Gautam Gambhir | Thanthi TV
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஒரு நயவஞ்சகர் என, முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் பணியாற்றிய மோர்னே மோர்கல், அபிஷேக் நாயர் என தனக்கு வசதியானவர்களை இந்திய அணியின் குழுவில் இணைத்துக் கொண்டு கம்பீர் சொகுசாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நயவஞ்சகரான கம்பீர், எப்போதும் தான் சொல்வதை செய்யவே மாட்டார் என்றும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா கோப்பை வெல்வதற்கு காலீஸ், சுனில் நரைன் மற்றும் தான் உட்பட ஏராளமானோர் பங்களித்ததாகவும், ஆனால் அதற்கான பெருமையை மட்டும் கம்பீர் எடுத்துக் கொண்டதாகவும் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.
Next Story