தீர்ப்பு நிறுத்தி வைப்பு - நிம்மதி பெருமூச்சுவிடும் கம்பீர்
வீடு வாங்கியவர்களிடம் மோசடி செய்த வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு எதிரான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதுவராகவும் இருந்த கவுதம் கம்பீர், வீடு வாங்கியவர்களிடம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை விடுவித்த டெல்லி குற்றவியல் நீதிமன்ற உத்தரவை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கவுதம் கம்பீர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நிறுவனத்தின் விளம்ப தூதராக இருப்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், கம்பீர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லுமாறு கூறியதை ஏற்க முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், கம்பீருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.