இந்திய வீரர்களின் பயிற்சியை நேரில் காண ரசிகர்களுக்கு தடை
- ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்களின் பயிற்சியை நேரில் காண, மைதானத்தில் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்களை காண, மைதானத்தில் சுமார் ஐந்தாயிரம் இந்திய ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்களில் சிலர் சில இந்திய வீரர்களை கடுமையாக கேலி செய்து கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது பயிற்சியை பாதியிலேயே முடித்து விட்டு கிளம்பிச் சென்றனர். இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, வீரர்களின் பயிற்சியை காண மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இந்திய வீரர்களின் பயிற்சியை காண ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது.
Next Story