இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து...2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தல்

x

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய 7வது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் ஜாவி சிமன்ஸ் கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் ஹாரி கேன் நன்கு பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க மல்லுக்கட்டிய நிலையில், போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியது. இங்கிலாந்து அணி சார்பில் மாற்று வீரராக களத்திற்குள் வந்த வாட்கின்ஸ் போட்டியின் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து இங்கிலாந்து ஹீரோவானார். இதன்மூலம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வென்ற இங்கிலாந்து அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்