கவனம் ஈர்த்த நூர் அகமது, விக்னேஷ் புத்தூர்

கவனம் ஈர்த்த நூர் அகமது, விக்னேஷ் புத்தூர்
x

சென்னை vs மும்பை அணிகளுக்கு இடைல நடந்த matchல, 3 வீரர்கள் கவனம் பெற்றுருக்காங்க.

First, நூர் அகமது..

சி.எஸ்.கே டீமோட ஒரு நல்ல தேர்வா ஆப்கானிஸ்தான் அணியோட ஸ்பின்னர் நூர் அகமது இருந்துருக்காரு. 4 விக்கெட் எடுத்து, அவருக்காக ஏலத்துல பத்து கோடி வரைக்கும் போனது தப்பே இல்லன்னு நிரூபிச்சுருக்காரு.

அடுத்ததா விக்னேஷ் புதூர்..

ஒரே மேட்ச்ல மும்பை அணியோட இளம் வீரர் விக்னேஷ் புதூர் பயங்கர பிரபலம் ஆகிட்டாரு. 30 லட்சம் ரூபாய்க்கு இவர ஏலம் எடுத்த மும்பை அணி, இவர கனகச்சிதமா பயன்படுத்திருகாங்கனுதான் சொல்லனும். முத மேட்ச்லயே 3 முக்கிய வீரர்கள அவரு தூக்குனதுக்கு பாராட்டுகள் குவிஞ்சுட்ருக்கு. அப்புறம் தோனி இவர்ட்ட பேசுன அந்த மொமண்ட் இருக்கே.. அதுவும் வைரல் தான்.

அடுத்து, சென்னை டீம்காக விளையாடி இப்போ மும்பை டீமுக்கு பெர்ஃபார்ம் பன்ற தீபக் சாஹர். இவரு திரிபாதி விக்கெட்ட எடுத்து மும்பைக்கு பிரேக் த்ரூ கொடுத்துட்டு, தோனி, ஜடேஜாவ ஃபன்னா வம்பு பன்ன வீடியோ இருக்கு பாருங்க... வேதனையா இருந்தாலும், ஜாலியா தான் இருக்குனு டிரெண்ட் ஆகிட்ருக்கு.


Next Story

மேலும் செய்திகள்