பாகிஸ்தான் அணிக்கு அடி மேல் அடி.. ஐசிசி செய்த அந்த சம்பவம் | Pakistan | ICC | Cricket
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தாமதமாகப் பந்துவீசியதற்காக பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. கேப்டவுனில் (CAPETOWN) நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, பாகிஸ்தான் வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானின் 5 புள்ளிகளும் பறிக்கப்பட்டுள்ளது.
Next Story